UAE Tamil Web

ஃபுஜைராவில் சாலை விபத்து: தப்பித்த ஓட்டுநரை விரட்டிப்பிடித்த காவல்துறை

ஃபுஜைரா காவல்துறையினர் முர்பா பகுதியில் உள்ள சாலையில் ஒரு நபர் மீது விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பித்து ஓடிய ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

விபத்து நடந்து 12 மணி நேரத்திற்குள் தப்பியோடிய டிரைவரை கைது செய்தனர் காவல்துரையினர்.

இது குறித்து ஃபுஜைரா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குனரான கர்னல் சலே முகமது அல்-தானி கூறியதாவது, “வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் செயல்பாட்டு அறைக்கு தகவல் வந்தது, அதில் சாலையில் ஒரு டிரைவர், ஓரமாக சென்றுக்கொண்டிருந்த நபர் மீது மோதியதாகவும் அதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் வந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஃபுஜைரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய டிரைவரைக் கைது செய்ய முர்பா காவல் நிலையத்தின் ஒத்துழைப்புடன் புலனாய்வு மற்றும் போக்குவரத்துத் துறையிலிருந்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டது விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து அந்த வாகன ஓட்டியை 12 மணி நேரத்திற்குள் சிஐடி குழுவினர் கைது செய்தனர்.

0 Shares
Share via
Copy link