UAE Tamil Web

துபாய் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு 506,000 திர்ஹம் இழப்பீடு

Dubai Road Accident Victim

துபாய் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு 506,000 திர்ஹம் இழப்பீடு வழங்கப்பட்டது.

ஃபுஜைராவில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 22ந் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கினார். அவருக்கு இழப்பீடாக 506,514 திர்ஹம் இழப்பீடு வழங்கப்படுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குட்டிப்புரத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவர் காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்த நிலையில், அவர் செய்த சட்டச் செலவுகளைத் திருப்பித் தருவதோடு, இழப்பீட்டு தொகையையும் அவருக்கு வழங்குமாறு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“டெலிவரி பாய் வேலை செய்யும் மளிகைக் கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் இருந்ததாக ரஹ்மான் கூறினார். இவர் நிறுத்தியிருந்த வாகனம் மீது வேகமாக வந்த வாகனம் திடீரென மோதியது. இதனால் ரஹ்மானின் வாகனம் நொறுங்கி, அவர் பலத்த காயம் அடைந்ததாக” அவர் தெரிவித்துள்ளார்.

“விபத்திற்கு மற்ற ஓட்டுனர்தான் காரணம் என்று உறதி செய்த நீதிமன்றம், எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. விபத்தின் காரணமாக எனக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு வாழ்நாள் முழுவதும் மருந்து தேவைப்படுகிறது. ஒரு நாள் கூட மருந்து சாப்பிடுவதை என்னால் தவறவிட முடியாது” என்று ரஹ்மான் கூறினார்.

குடும்ப நண்பர் இஸ்மாயில் மற்றும் சமூக சேவகர் மற்றும் சட்டப் பிரதிநிதி சலாம் பாப்பினிசேரியை அணுகி தனக்கு ஆதரவாக வழக்குத் தாக்கல் செய்ததாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.பாப்பினிசேரி மருத்துவ மற்றும் காவல்துறை அறிக்கைகளை காப்பீட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

காப்பீட்டு ஆணையம் முதலில் 500,000 திர்ஹம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. “பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட காயம் பெரிதாக இல்லை என்று சுட்டிக்காட்டி, இழப்பீட்டுத் தொகையைக் குறைக்கக் கோரி காப்பீட்டு நிறுவனம் துபாய் நீதிமன்றத்தில் சிவில் வழக்கைத் தாக்கல் செய்தது” என்று ரஹ்மான் கூறினார்.

இருப்பினும், காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கைகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. வாகனத்தின் மீது மோதிய ஓட்டுநரின் தவறு தான் விபத்துக்கு காரணம் என்று நீதிமன்றம் கண்டறிந்தது. மருத்துவ அறிக்கைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பின்னர் அதே வாதத்தின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால், மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. காயங்கள் மற்றும் இழப்பீடு கோரிக்கையை மதிப்பிடுவதற்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை போதுமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிகிச்சைக்கு பணம் பயன்படுத்தப்படும்

ரஹ்மான் தனது இழப்பீட்டில் பெரும்பகுதியை அவரது சிகிச்சைக்கு பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளார். தற்போது வேலை இல்லாமல் இருப்பதால் நான் நல்லபடியாக வீட்டிற்கு செல்கிறேன். மூளைக்காயம் காரணமாக இந்தியாவில் கூட, நான் இனி வேலை செய்யும் நிலையில் இருக்க மாட்டேன் என்று ரஹ்மான் வேதனை தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap