UAE Tamil Web

அரிய வகை ரத்தம்.. ஆனாலும் 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் – அமீரகத்தில் சத்தமில்லாமல் உதவி செய்யும் இந்தியர்

தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்பார்கள், ஆனால் அதுவே அரியவகை ரத்தம் கொண்டவர்கள் என்று வரும்போது வெகு சிலரே தானம் செய்ய முன்வருகின்றனர். அந்த வகையில் மிக அறிய வகை ரத்தம் என்றபோதும் 3 மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் ரத்தம் கொடுத்து வருகின்றார் ராய் ராஜன்.

அமீரகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ராய் ராஜனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அவருடைய O நெகட்டிவ் இரத்தம், ஒரு அரிய வகை ரத்தத்தை, ஒரு அவசர சிகிச்சைக்கு தானம் செய்யும்படி அவரை கெஞ்சினார்கள்.

அபுதாபியில் வசித்து வரும் இந்தியரான ராய் ஊசி மற்றும் இரத்தத்தின் மீதான தனது தீவிர பயத்தை எதிர்த்து முதன்முறையாக ரத்த தானம் செய்து அன்று ஒரு உயிரைக் காப்பாற்றினார். அன்று முதல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்து வருகிறார்.

இதுகுறித்து ராய் பேசியபோது “அந்த நாள் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது, 2017ம் ஆண்டு கோடை காலத்தில் ஒரு நாள் அவசரகாலத்தில் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற எனக்கு ஒரு பொதுவான நண்பர் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்” என்றார் அவர்.

ஓ-நெகட்டிவ் என்பது மக்கள் தொகையில் 7 சதவீதத்தினரிடம் மட்டுமே காணப்படும் அரிய வகை இரத்தக் குழுவாகும். அனைத்து இரத்த வகை நோயாளிகளுக்கும் கொடுக்கப்படுவதால், இது எப்போதும் தேவைபடுகிறது.

அன்று நான் காப்பாற்றிய உயிர் தான் என்னை ரத்த தானம் செய்ய தூண்டியது, இப்பொது 3 மாதத்திற்கு ஒரு முறை நான் ரத்த தானம் செய்கின்றேன், என்று பெருமையோடு கூறுகின்றார் ராஜன்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap