துபாயிலிருந்து இருந்து கடத்தி வரப்பட்ட 44.25 லட்ச ரூபாய் மதிப்பிலான, 990 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து Fly Dubai விமானம் நேற்று சென்னை சென்றது. அதில் பயணித்த ஒருவர், தங்கம் கடத்தி வருவதாக, விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சென்னையை சேர்ந்த 32 வயதுடைய நபரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் இருந்த பிளாஸ்டிக் பொட்டலத்தில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
அதை சோதனனை செய்து பார்த்ததில், 44.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 990 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்து விசாரனை நடத்து வருகின்றனர்.