UAE Tamil Web

துபாயிலிருந்து ரூ.5 கோடி தங்கம் கடத்தல்… சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னைக்கு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சரக்கு விமானம் மூலம் வந்த சரக்குகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சலில், இயந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் இருப்பது தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் அந்த பார்சலில் இருந்த செல்போன் எண்ணுக்கு அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். ஆனால் எண் உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது. அந்த பார்சலில் இருந்த முகவரியும் போலியானது என்று தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பார்சலை திறந்து பார்த்ததில் புதிய தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ தங்க கட்டிகள் இருப்பதை கண்ட மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap