துபாய் எக்ஸ்போ 2020 வரும் அக்டோபர் 1 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு துபாய் முழுவதும் 9 இடங்களில் இருந்து எக்ஸ்போ சிட்டிக்கு இலவச பேருந்துகளை இயக்க இருப்பதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. எக்ஸ்போ ரைடர் எனப்படும் 126 பேருந்துகளை துபாய் எக்ஸ்போ சிட்டிக்கு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
கூடுதலாக துபாய் நகர ஹோட்டல்களில் இருந்து எக்ஸ்போ சிட்டிக்கு மக்கள் பயணிக்க கூடுதலாக 2 வழித்தடம் அமைக்கப்பட இருப்பதாக RTA அறிவித்துள்ளது. மேலும் எக்ஸ்போ கேட்கள் மற்றும் பார்க்கிங் பகுதியிலிருந்து எக்ஸ்போ மையத்திற்குச் செல்ல பேருந்து சேவையும் துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி – புதன் கிழமைகள் வரை 1956 பேருந்துகளும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 2203 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன. இவை 3 – 60 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்ற வீதத்தில் இயக்கப்படும் என RTA அறிவித்துள்ளது.
பேருந்து நிலையங்களும் இயக்கப்படும் பேருந்துகளின் அளவும்
பாம் ஜுமைரா
சனி – புதன் கிழமைகள் : மொத்தம் 6 பேருந்துகள் (இரு திசைகளிலும்) கொண்டு மொத்தம் 54 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
வியாழன் – வெள்ளி : மொத்தம் 57 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒருமுறை பேருந்து சேவை வழங்கப்படும்.
அல் பராஹா
சனி – புதன் கிழமைகள் : மொத்தம் 7 பேருந்துகள் (இரு திசைகளிலும்) கொண்டு மொத்தம் 64 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
வியாழன் – வெள்ளி : மொத்தம் 68 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒருமுறை பேருந்து சேவை வழங்கப்படும்.
அல் குபைபா
சனி – புதன் கிழமைகள் : மொத்தம் 12 பேருந்துகள் (இரு திசைகளிலும்) கொண்டு மொத்தம் 74 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
வியாழன் – வெள்ளி : மொத்தம் 76 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருமுறை பேருந்து சேவை வழங்கப்படும்.
மெட்ரோ, டிராம் மற்றும் மரைன் என பல்வேறு போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ள இடம் என்பதால் இங்கே கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எதிசலாட்
சனி – புதன் கிழமைகள் : மொத்தம் 8 பேருந்துகள் (இரு திசைகளிலும்) கொண்டு மொத்தம் 70 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
வியாழன் – வெள்ளி : மொத்தம் 72 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
குளோபல் வில்லேஜ்
அனைத்து வார நாட்களிலும் 10 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 60 நிமிடத்திற்கும் ஒருமுறை பேருந்து சேவை வழங்கப்படும்.
இன்டர்நேஷனல் சிட்டி
சனி – புதன் கிழமைகள் : மொத்தம் 8 பேருந்துகள் (இரு திசைகளிலும்) கொண்டு மொத்தம் 72 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
வியாழன் – வெள்ளி : மொத்தம் 82 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருமுறை பேருந்து சேவை வழங்கப்படும்.
துபாய் சிலிக்கான் ஓயாசிஸ்
சனி – புதன் கிழமைகள் : மொத்தம் 8 பேருந்துகள் (இரு திசைகளிலும்) கொண்டு மொத்தம் 72 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
வியாழன் – வெள்ளி : மொத்தம் 82 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருமுறை பேருந்து சேவை வழங்கப்படும்.
துபாய் மால்
சனி – புதன் கிழமைகள் : மொத்தம் 5 பேருந்துகள் (இரு திசைகளிலும்) கொண்டு மொத்தம் 55 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
வியாழன் – வெள்ளி : மொத்தம் 59 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒருமுறை பேருந்து சேவை வழங்கப்படும்.
துபாய் சர்வதேச விமான நிலையம்
சனி – புதன் கிழமைகள் : மொத்தம் 8 பேருந்துகள் (இரு திசைகளிலும்) வாரத்தின் ஏழு நாட்களிலும் மொத்தம் 52 சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை பேருந்து சேவை வழங்கப்படும்.
முன்னதாக ஒவ்வொரு எமிரேட்டில் இருந்தும் துபாய் எக்ஸ்போ சிட்டிக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக RTA தெரிவித்திருந்தது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.