ஷார்ஜா செல்லும் மலிஹா சாலை மார்ச் 27, ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு மாதங்களுக்கு மூடப்படுவதாக ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) அறிவித்துள்ளது.
மேலும் அதற்கான தற்காலிகமான புதிய போக்குவரத்து மாற்றங்கள் குறித்த விபரங்களையும் RTA தெரிவித்துள்ளது.
#Sharjah_Roads_Transport_Authority: Temporary diversion of traffic on Maliha Road towards Sharjah near Hoshi area for a period of two months starting from Sunday, March 27, 2022 at 5:00 am until Friday, May 27, 2022 pic.twitter.com/Y9zZipRheA
— RTA Sharjah (@RTA_Shj) March 24, 2022
ஷார்ஜாவை செல்லும் மலிஹா சாலை பரமரிப்புக்காக பகுதி அளவு மூடப்பட உள்ளது. இந்த மூடல் மார்ச் 27 அன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மே 27 வெள்ளி வரை 2 மாதங்களுக்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள் செல்லக்கூடிய மாற்று வழிகளையும் ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து, கவனமாக வாகனங்களை ஓட்டுமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.