UAE Tamil Web

துபாய் மெட்ரோ இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக RTA அறிவிப்பு – ஜூன் 1 ஆம் தேதிமுதல் அமல்..!

dubai-metro_

துபாய் மெட்ரோவின் கிரீன் லைனில் இயக்கப்படும் ரயில்களின் பயண நேரம் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து அதிகாலை 5 மணிமுதல் கிரீன் லைனில் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

இதுகுறித்து RTA வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” துபாய் மெட்ரோவினைப் பயன்படுத்தும் மக்களின் கவனத்திற்கு, கிரீன் லைனில் இயக்கப்படும் ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனி – புதன்கிழமைகளில் அதிகாலை 5 மணிமுதல் காலை 12 மணிவரையிலும் வியாழக்கிழமைகளில் அதிகாலை 5 மணிமுதல் அடுத்தநாள் காலை 1 மணிவரையிலும் வெளிக்கிழமைகளில் காலை 10 மணிமுதல் அடுத்தநாள் காலை 1 மணிவரையிலும் ரயில்கள் இயக்கப்படும். முன்னதாக கிரீன் லைனில் அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு வரையில் ரயில்கள் இயக்கப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் மற்றும் துபாய் எக்ஸ்போ 2020 மெட்ரோ நிலையங்கள் ஜூன் 1 ஆம் தேதிமுதல் பயன்பாட்டிற்கு வரவிருப்பதாக RTA தெரிவித்திருந்தது. அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் “மெட்ரோவின் கிரீன் லைனில் அதிகாலை 5 மணிமுதல் ரயில்கள் இயக்கப்படும். பீக் நேரங்களில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும்” தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.