துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் தெற்குப் பகுதியில் இருந்து பொது பேருந்து நெட்வொர்க்கிற்கு புதிய பேருந்து வழித்தடத்தை மே 19 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த சேவையானது தனியார் துறையின் ஒத்துழைப்புடன் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து வழித்தடம் துபாய் எக்ஸ்போ 2020 மெட்ரோ நிலையத்தின் சிவப்பு பாதையில் இணைக்கவும், பேருந்துகள் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பேருந்து சேவையானது பொதுப் போக்குவரத்து பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கொண்டுவரப்பட்டதாக RTA-வின் பொதுப் போக்குவரத்து முகமையின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷக்ரி கூறினார்.