36.9 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

ஈத் அல் பித்ர் விடுமுறையை முன்னிட்டு பொதுப் போக்குவரத்தில் நேர மாற்றத்தை அறிவித்தது துபாய் போக்குவரத்து ஆணையம்!

rta

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (Roads and Transport Authority) ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களை முன்னிட்டு பொதுப் போக்குவரத்திற்கான (டிராம், பேருந்து, கடல் வழிப் போக்குவரத்து, டாக்ஸி மற்றும் பகிர் – போக்குவரத்து) சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது. மேலும், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மற்றும் சேவை மையங்களுக்கும் இந்த நேர மாற்றம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர மாற்றம், தேசிய சுத்திகரிப்பு பணிகளுக்கான திருத்தப்பட்ட நேரமான இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை என்பதனை உறுதிசெய்கிறது. பொதுப் போக்குவரத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த நேர மாற்றம் மே 26, 2020  வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவைகளில் மேற்கொள்ளப்பட்ட நேர மாற்றத்தைக் கீழே காணலாம்.

1. துபாய் பேருந்துகள் இயக்கப்படும் நேரங்கள்:

bus 1
Image Credit : khaleejtimes

2. வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மற்றும் பார்க்கிங்களுக்கான நேரங்கள்:

customer
Image Credit : khaleejtimes

3. கடல்வழிப் போக்குவரத்திற்கான நேரங்கள்:

marine
Image Credit : khaleejtimes

4. துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் வாகன பரிசோதனை நிலையங்களுக்கான நேரம்:

metro
Image Credit : khaleejtimes

மற்ற சில பதிவுகள்