ரமலான் மாதம் ஆரம்பமாக இருக்கும் நிலையில் வாகனங்களை நிறுத்த கட்டண பார்க்கிங் நேரத்தை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) மற்றம் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
RTA-வின் அறிவிப்பின்படி, வார நாட்களான திங்கள் முதல் சனிக்கிழமை வரை துபாயில் உள்ள அனைத்து பார்க்கிங்கிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரையிலும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று F குறியீடு கொண்ட பார்க்கிங் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டணம் என்றும் அடுக்குமாடி பார்க்கிங்கில் நாள் முழுவதும் கட்டண செலுத்த வேண்டும் என்றும் RTA கூறியுள்ளது.
முன்னதாக துபாயில் வெள்ளிக்கிழமை இருந்த இலவச பார்கிங் வசதி தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.