துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) 2023-2027 காலகட்டத்தில் 37 கிமீ நீளத்திற்கு பேருந்து மற்றும் டாக்ஸி பாதைகளை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஷேக் கலீஃபா பின் ஜயீத் பகுதி, ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா பகுதி, டிசம்பர் 2வது தெரு, அம்மான் தெரு, அல் சத்வா சாலை, அல் நஹ்தா தெரு, உமர் பின் அல் கத்தாப் தெரு மற்றும் நயிஃப் தெரு ஆகிய 8 முக்கிய தெருக்களுக்கு 48.6 கி.மீ. நீளத்தில் பேருந்து மற்றும் டாக்ஸி பாதைகள் அமைக்கப்பட உள்ளது.
RTA இன் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரும், இயக்குநர் ஜெனரலுமான மட்டர் அல் டயர் கூறுகையில், “பேருந்து மற்றும் டாக்ஸி பாதைகள் அமைக்கும் பணி உலகளாவிய நடைமுறையாகும், இந்த திட்டத்தின் மூலம் தனியார் வாகனங்களை விட பொது போக்குவரத்தௌ மக்களை விரும்புவார்கள்” என்று கூறினார்.
“சில பகுதிகளில் 2030 ஆம் ஆண்டில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 30 சதவிதம் அதிகரிக்கும்”
இதன்மூலம், ஒவ்வொரு பேருந்தின் பயண நேரமும் சுமார் 5 நிமிடங்களை மிச்சப்படுத்தும், இதனால் பேருந்து மற்றும் டாக்சி ஓட்டுங்கர்கள் மகிழ்ச்சி அடைவர்” என்று அல் டயர் மேலும் கூறினார்.