சிறந்த டாக்ஸி டிரைவர்களை கௌரவித்த துபாய் RTA.!

RTA Excellence Award 2019

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பொது இயக்குநர் மற்றும் குழுவின் தலைவருமான மட்டார் அல் டையர் (Mattar Al Tayer) RTA-வின் வருடாந்திர சிறந்த டாக்ஸி சேவை விருதுகளை 50 துபாய் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

மேலும், புதிய சிறந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவரையும் RTA கௌரவித்தது. இதில் தங்களை நம்பி வரும் வாடிக்கையாளர்களை நல்லமுறையில் நடத்துவது, பல்வேறு மொழிகள் பேசும் திறமைக்கொண்ட துபாய் டாக்ஸி கார்ப்பரேஷனில் பணிபுரியும் போவெல் ஜஸ்டிஸ்க்கு (Powel Justice) சென்றது.

இந்நிகழ்ச்சியில் மட்டார் அல் டையர் (Mattar Al Tayer) பல்வேறு ஆபரேட்டர்கள் அதாவது Dubai Taxi Corporation, Arabian Taxi, Cars Taxi, Metro Taxi, and National Taxi போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த டாக்ஸி ஓட்டுனர்களை பாராட்டினார்.

இந்த ‘சிறந்த டாக்ஸி சேவை விருதுகள்’ டாக்ஸி சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், சேவை வழங்கும் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு மத்தியில் போட்டி சூழலை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...