ரமலான் மாதம் 27 நாட்களை கடந்துவிட்ட நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஊ ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊழியர்களுக்கு ஏப்ரல் 30, சனிக்கிழமை முதல் மே 6 வெள்ளி வரை விடுமுறை நாட்கள் இருக்கும். பின்னர் மே 7 மற்றும் 8 ஆம் தேதி சனி, ஞாயிறு வார விடுமுறை இருக்குமேயானால் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் ஈத் அல் பித்ர் விடுமுறையாகும்.
இந்த ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் துபாய் வாகன ஓட்டிகளுக்கு ஏழு நாட்கள் இலவச பார்க்கிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) ஏப்ரல் 30 முதல் மே 6 வரை பார்க்கிங் கட்டணம் இலவசம் என்றும் மே 7 முதல் பார்க்கிங் கட்டணம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.