துபாயில் அறிமுகப்படுத்தியுள்ள வாடகை சைக்கிளின் வாடகை எவ்வளவு.?

careem bike rent details

சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் மற்றும் கரீம் ஆகியவை இணைந்து துபாயில் அதிகாரப்பூர்வமாக ஒரு மிதிவண்டி வாடகை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

அதில் ஒரு குறிப்பிட்ட மிதிவண்டியை வாடகைக்கு எடுப்பதற்கு, பயனர்கள் மெம்பெர்ஷிப் கார்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

  • தினசரி உறுப்பினர் விலை 20 திர்ஹம்ஸ்
  • வாராந்திர உறுப்பினர் விலை 50 திர்ஹம்ஸ்
  • மாத உறுப்பினர் 75 திர்ஹமஸ்
  • ஒரு வருடம் முழுவதும் வாடகைக்கு எடுக்க 420 திர்ஹம்ஸ்.

ஒரு மிதிவண்டியை வாடகைக்கு எடுத்த பிறகு, அந்த நபர் அவர்கள் விரும்பும் அளவுக்கு 45 நிமிட பயணம் மேற்கொள்ளலாம் (அவர்களது மெம்பெர்ஷிப் கார்டுகள் செயலில் இருக்கும் போது).

45 நிமிடங்களுக்கு மேல் பயணத்தை நீட்டிக்க விரும்பினால், கூடுதல் நேரத்தின் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 10 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதுவே இப்பகுதியில் முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...