UAE Tamil Web

முதன்முறையாக துபாய்க்கு வருகிறது டிரைவர் இல்லா டாக்ஸி சேவை – புது அனுபவத்திற்கு ரெடியா இருங்க மக்களே..!

dubai-taxi-two

துபாயில் 2023 ஆம் ஆண்டு டிரைவர் இல்லா டாக்சிக்களை அறிமுகம் செய்ய இருப்பதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று அறிவித்துள்ளது.

2021-2023 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் துபாயில் இயக்கப்படும் டாக்சிக்களில் 5% டிரைவர் இல்லாததாக இருக்கும் என துபாய் RTA வின் இயக்குனரும் நிர்வாக இயக்குனர் குழுவின் தலைவருமான மட்டார் முகமது அல் தயேர் அறிவித்துள்ளார்.

“உலகளாவிய டாக்சி பயணத்தில் ஒப்பிடுகையில் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது. இது குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளிடையே வரவேற்பைப்பெறும் என நம்புகிறோம்” என தயேர் குறிப்பிட்டார்.

பயணிகளின் பாதுகாப்பான பயணம் மற்றும் நீடித்த டிஜிட்டல் போக்குவரத்து சேவையை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டத்தை துபாய் RTA கையில் எடுத்துள்ளது.

புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சிறப்புத் திட்டத்தை RTA செயல்படுத்திவருகிறது. இதன்மூலம், டிரைவர் இல்லாத டாக்சிக்களை வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அமீரகம் பெற இருக்கிறது.

இந்த சேவையினை நடைமுறைப்படுத்தத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதில் வெற்றியடைந்துள்ளதாகவும் வரும் 2030 ஆம் ஆண்டில் துபாயில் 4000 டிரைவர் இல்லா டாக்சிகள் இயங்கும் எனவும் RTA தெரிவித்துள்ளது.

dubai-taxi-two
6 Shares
Share via
Copy link