அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் துபாய் ஆட்டிசம் சென்டரை (Dubai Autism Center) திறப்பதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்.
ஆட்டிசம் என்பது ஒருவித குறைபாடாகும். இவர்கள் கூடுதல் கவனம் தேவைப்படும் குழந்தைகளாவர். ஆகவே, இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கணக்கில்கொண்டு இந்த புதிய மையத்தைத் திறக்க துபாய் ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.
.@HHShkMohd, in his capacity as Ruler of Dubai, Issues Decree on Dubai Autism Center, aiming to make #Dubai a leading centre for the education and treatment of people with autism.https://t.co/zA4avvNftw pic.twitter.com/yFspPRn5UH
— Dubai Media Office (@DXBMediaOffice) July 29, 2021
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை இந்த மையம் கவனித்துக்கொள்ளும். துபாய் ஆட்சியாளரின் உத்தரவை அடுத்து, துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் துபாய் ஆட்டிசம் மையத்திற்கான குழு உறுப்பினர்களை நிர்வகித்து தீர்மானம் எண் 22 (2021) ஐ வெளியிட்டார்.
The Board will be chaired by Hesham Al Qassim & its members include Dr. Alia bint Humaid Al Qassimi, Dr. Hind Abdul Wahid Al Rostamani, Sami Al Reyami, Salha Khalifa bin Thiban Al Falasi, Dr. Sheikha Ahmed Al Raisi & the Director General, who will be appointed by the Chairman.
— Dubai Media Office (@DXBMediaOffice) July 29, 2021
துபாய் இளவரசரின் தீர்மானத்தின்படி, இந்த மையத்திற்கு ஹெஷாம் அல் காசிம் தலைமை தாங்குவார் என்றும் டாக்டர் ஆலியா பின்ட் ஹுமாயத் அல் காசிமி, டாக்டர் ஹிந்த் அப்துல் வாஹித் அல் ரோஸ்தாமணி, சமி அல் ரியாமி, சல்ஹா கலீஃபா பின் திபன் அல் ஃபலாசி, டாக்டர் ஷேக்கா அகமது அல் ரைசி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மையத்தின் இயக்குநர் ஜெனரல் யார் என்பதை தலைவர் தேர்ந்தெடுப்பார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
