துபாய் சர்வதேச விமான விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒரு ஓடுபாதையை மே மாதம் முதல் 45 நாட்களுக்கு மூடப்பட இருப்பதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஓடுபாதையை மூடல் காரணமாக கோடைகால தொடக்கத்திற்கு முன் விமான சேவைகளும் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் திறமையான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காகவும் விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் மே 9 முதல் ஜூன் 22 வரை பராமரிப்பு பணி நடைபெறும் என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.
விமானங்களின் தாமதங்கள் மற்றும் இடையூறுகளை குறைக்க, சில விமானங்களை துபாயின் இரண்டாவது விமான நிலையமான அல் மக்தூம் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்படும். இந்த பராபரிப்பு பணி காரணமாக விமானங்களை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார்.
இந்த ஓடுபாதை கடந்த 2014 ஆம் ஆண்டு மேம்பாட்டு பணிக்காக மூடப்பட்டபோது, அதே நேரத்தில் தெற்கு ஓடுபாதை 2019 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.