உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா எடுத்திருக்கும் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை ஆதரித்து சில நாடுகள் வாக்களித்தன. அதில் இந்தியா, அமீரகம் மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தன.
பின்னர் விசாரணை நடத்துவதற்காக சுதந்திரமான ஆணையம் ஒன்று அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வருவதற்காக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் வாக்கெடுப்பு நடத்தியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 32 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. அதில் அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நேபாளம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் வாக்களித்தன.
இதையடுத்து தனக்கு எதிராக ஐ.நாவில் வாக்களித்த நாடுகளை ரஷ்யா தற்போது தனது நட்புப் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. அதில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்கொரியா, ஐஸ்லாந்து, ஜப்பான், மொனாக்கோ, மான்டெனெக்ரோ, நார்வே, தைவான், சான் மரினோ, ஸ்விட்சர்லாந்து, உக்ரைன் ஆகிய 16 நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தனது நட்புப் பட்டியலில் இருந்து நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஐ.நா. பொதுச்சபையில் அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பிய நிலையில் இந்திய மாணவர்களை மீட்பதே பிரச்சனை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மக்களுக்கு உதவும் வகையில் அமீரக அவசரகால நிவாரண திட்டமாக சுகாதார உதவி மற்றும் மருத்துவப் பொருட்கள் 30 டன்-ஐ விமானம் மூலம் அமீரக அரசு அனுப்பி வைத்தது.
அமீரகம் உக்ரைனுக்கு மக்களுக்கு உதவியாகவும், இந்தியா, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்தும் வரும் நிலையில் ரஷ்யா தனது நட்புப் பட்டியலில் இருந்து அமீரகம் மற்றும் இந்தியாவை நீக்கவில்லை.