UAE Tamil Web

“விவசாயம் காப்போம்.. மண் வளம் காப்போம்..” அபுதாபியில் நடந்த ICAI Meetல் பேசிய சத்குரு – இன்னும் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டம்

மண்ணை காப்போம் என்ற பிரச்சாரத்தோடு 100 நாள் பைக் பயணத்தை சில நாட்களுக்கு முன்பு துவங்கினார் இந்தியாவை சேர்ந்த சத்குரு ஜக்கி வாசுதேவ். இந்நிலையில் இந்த பயணத்தில் ஒரு பகுதியாக கடந்த மே 17ம் தேதி அமீரகம் வந்தடைந்தார் அவர்.

ஜுபைல் தீவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற பிறகு ICAI (Institute of Chartered Accountants of India) அமைப்பால் அபுதாபியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசினார் அவர். மண்ணை காப்போம் என்ற இந்த சூளுரை இங்கிருந்து துவங்கட்டும் என்றும் அவர் கூறினார்.

ICAI அபுதாபியின் தலைவர் ஜான் ஜார்ஜ் பேசும்போது : “மூன்று தசாப்தங்களாக, சத்குரு மண்ணின் முக்கியத்துவத்தையும், மண் அழியும் அபாயத்தையும் பற்றி எடுத்துரைத்து வருகின்றார். Save Soil இயக்கத்தின் மூலம், மண் சீரழிவின் விளிம்பில் இருந்து திரும்ப மனித குலத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் புறப்பட்டுள்ளார்”.

“நாம் அவர் சொல்லும் விஷயத்தை இனியேனும் கடைபிடிக்கவில்லை என்றா மிகப்பெரிய விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்” என்றும் ஜான் ஜார்ஜ் பேசினார்.

சத்குருவின் இடைவிடாத முயற்சிகளுக்காகவும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான உலகளாவிய தொண்டனாக மாறியதற்காகவும் ஜார்ஜ் சத்குருவை பாராட்டினார். மேலும் நாங்கள் நடத்திய இந்த நிகழ்வில் இங்கு வந்து சிறப்பித்ததற்காகவும் நாங்கள் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றும் கூறினார்.

90 சதவீத காடழிப்பு, பூமியில் விவசாயம் குறைந்ததன் காரணமாக நடந்தது, ஆனால் யாரும் அதைப் பற்றி பேச விரும்பவில்லை, ஏனென்றால் அதில் லாபம் இல்லை. மண்ணைப் பற்றி யாரும் பேச விரும்பவில்லை” என்று சத்குரு பேசியபோது கூறினார்.

Journey to Save Soil என்ற தலைப்பில் அவர் இதுவரை சுமார் 27 நாடுகளுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap