UAE Tamil Web

முக்கியச் செய்தி; அமீரகத்தில் இனி சனி, ஞாயிறு வார விடுமுறை – வாரத்திற்கு இரண்டரை நாட்கள் விடுமுறை என அரசு அறிவிப்பு..!

UAE public, private sector holidays

அமீரகத்தில் பெடரல் அரசு ஊழியர்களுக்கு இனி வெள்ளி, சனிக்கிழமைக்குப் பதிலாக வெள்ளி மதியம் துவங்கி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வரை வார விடுமுறை விடப்படும் என அமீரக அரசு இன்று அறிவித்திருக்கிறது.

ஜனவரி 1, 2022 ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை மதியம் வரை மட்டுமே வேலை நாட்களாக இருக்கும்.

பெடரல் அரசு ஊழியர்களைப் பொறுத்தவரையில் காலை 7.30 முதல் மதியம் 3.30 வேலை நேரங்களாக இருக்கும். அதாவது ஒரு நாளைக்கு 8.5 மணிநேரம் வேலை நேரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை 4.5 மணி நேரங்களாக வேலை நேரம் இருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தே பணிபுரிய பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UAE public, private sector holidays
20 Shares
Share via
Copy link