ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப் படைகளால் அபுதாபி மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலின் போது 3 பேர் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து மீண்டு ஹவுதி கிளர்ச்சிப்படை அபுதாபி மீது தாக்குதல் நடத்த 3 முறை ஏவுகணை குண்டுகளை அனுப்பியது. ஆனால் அந்த குண்டுகளை அமீரக அரசு தடுத்து நிறுத்தியது. தடுக்கப்பட்ட அந்த ஏவுகணைகளின் குண்டுகள் அபுதாபி சுற்றுப்பகுதியில் செயலிழந்து விழுந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதனையடுத்து அமீரகத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா அவ்வபோது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி அரேபியா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. போர் விமானங்கள் மூலம் ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையே போர் நடந்துவரும் சூழலில் ஏமன் நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.