கொரோனா பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் இருந்து மக்கள் அமீரகம், அர்ஜென்டினா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் செல்ல அந்நாடு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், அந்தத் தடையை விலக்கிக்கொள்வதாக சவூதியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மக்கள், முகக்கவசங்களை அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தொடர்ந்து பின்பற்றுதல் வேண்டும் என சவூதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவூதியில் இருந்து மக்கள் அமீரகம் செல்லலாம் என்ற அறிவிப்பினால் பல மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
