UAE Tamil Web

துபாயில் சவூதி இளவரசர் ; அமீரக அரச குடும்பத்தினருடன் நடைபெற்ற சந்திப்பு..!

sheikh and salman

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அரசு முறைப் பயணமாக அமீரகத்திற்கு வந்திருக்கிறார். அவரை, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வரவேற்றார்.


துபாய் எக்ஸ்போவில் உள்ள சவூதி பெவிலியனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் உடனிருந்தார்.

பின்னர், அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சவூதி இளவரசர் சந்தித்தார்.

இருநாட்டு உறவுகள் குறித்தும் பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sheikh and salman
0 Shares
Share via
Copy link