UAE Tamil Web

உங்க அப்பா எனக்கு பணம் தரணும் – தந்தை இறப்புக்குப் பின்னர் மகனிடம் பணம் பறிக்க முயன்ற மோசடி ஆசாமிக்கு 2 மாதம் சிறை!

மோசடிகள் பல விதம்.. அதில் இது ஒருவிதம் என்பதற்கேற்ப அபுதாபியில் நூதன மோசடி செய்ய முயன்று 2 மாதம் சிறைத் தண்டையை பரிசாக பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அபுதாபியைச் சேர்ந்த ஒருவருக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய மோசடி ஆசாமி, அண்மையில் காலமான உங்கள் தந்தையும் எங்கள் வாடிக்கையாளருமான மரணித்தவருக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், உங்கள் தந்தை எங்கள் கடையில் இருந்து சரக்கு வாங்கிவிட்டு 900 திர்ஹம்ஸ் பாக்கி வைத்திருப்பதாகவும் அதனை தாங்கள் விரைவில் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

15 Common Job Search Scams and How to Protect Yourself | FlexJobsசந்தேகமடைந்த இறந்தவரின் மகன், மோசடி ஆசாமியிடம் அடையாள அட்டையை அனுப்புமாறு கேட்டுள்ளார். அடையாள அட்டையை அனுப்ப மறுத்த மோசடி ஆசாமி, தான் பிசியாக இருப்பதாக கூறி தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். இதையடுத்து சந்தேகத்தின்பேரில் தன்னை தொடர்பு கொண்ட நபர் குறித்து போலீசாரிடம் இறந்தவரின் மகன் புகார் அளிக்க, அந்த எண்ணை வைத்து அதிகாரிகள் மோசடி ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில் சமூக வலைத்தளங்களில் வெளியான இரங்கல் செய்தியில் குறிப்பிட்ட எண்ணை வைத்து மோசடி செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மோசடி ஆசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், நீதிபதி உத்தரவின்பேரில் 2 மாதம் சிறையில் அடைத்தனர்.

1 Share
Share via
Copy link