அமீரகத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்தில் திடீரென நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
ஷார்ஜாவின் அல் தவுன் பகுதியில் உள்ள பள்ளியின் பேருந்து ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயை ஷார்ஜா கதற்காப்புக் குழு அணைத்தது. இந்த தீ விபத்தில் காயங்கள் மற்றும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து ஷார்ஜா சிவில் தற்காப்பு அதிகாரி கூறுகையில், ஷார்ஜாவில் உள்ள சிவில் பாதுகாப்புத் துறை செயல்பாட்டு அலுவலகத்திற்கு பிற்பகல், அல் தவுன் பகுதியில் உள்ள பள்ளியின் பேருந்து ஒன்றில் தீ பற்றிவிட்டதாக தகவல் கிடைத்தது.
இதன் பின்னர் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு 14 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட உடனே மாணவர்கள் பேருந்தில் இருந்து எந்த பாதிப்பும் இன்றி அவசர பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இதனால யாருக்கும் காயங்கள், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை என்று சிவில் தற்காப்பு அதிகாரி கூறினார்.