ரமலான் மாதத்தில் துபாயில் உள்ள தனியார் பள்ளிகளின் பள்ளி நேரம் குறைக்கப்படும் என்று எமிரேட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் 5 மணி நேரத்திற்கு மேல் வகுப்புகளை நடத்தக் கூடாது என துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையமான (KHDA) பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
KHDA இன் அனுமதிகள் மற்றும் இணக்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது தர்விஷ் கூறுகையில், “வெள்ளிக்கிழமைகளில் மதியத்திற்குள் வகுப்புகள் முடிக்க வேண்டும். வீட்டுப் பாடம் மற்றும் பணிகளின் அளவைக் குறைக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிக நேரம் பிரார்த்தனை செய்வதிலும், தங்கள் குடும்பத்தினருடன் செலவிடுவதையும் உறுதிசெய்யும் வகையில் பள்ளிகளுக்கு KHDA உத்தரவிட்டுள்ளது” என்றார்.