UAE Tamil Web

நேரடி வகுப்புகளின்போது இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியானால் பள்ளிக்கூடத்தை உடனடியாக மூட ஷார்ஜா தனியார் பள்ளிக்கல்வி அமைப்பு உத்தரவு!

school-open-1

கோடை விடுமுறைக்குப் பிறகு அமீரகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஷார்ஜா தனியார் பள்ளிக்கல்வி அமைப்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நேரடி வகுப்புகள் தொடங்கியதும் மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது ஊழியர்கள் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் 2க்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடத்தை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் 75% இருக்கைகளில் மாணவர்கள் பயணிக்கலாம் என்றும் தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் ஷார்ஜா தனியார் பள்ளிக்கல்வி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

school-open-1
0 Shares
Share via
Copy link