ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாவது புயல்- தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Second cyclone to bring more flooding to UAE by Monday (Photo : Gulf News)

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் திங்கள்கிழமை, அதிக வெள்ளத்தை ஏற்படுத்தும் இரண்டாவது சூறாவளி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) தகவலின் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு கடற்கரையில் வரும் திங்கள்கிழமை முதல் அதிக அலையுடன் கூடிய நீர் உயர்வு திரும்பக்கூடும் என்று கூறியுள்ளது.

கியார் சூறாவளியின் காரணமாக இந்த வாரம் கல்பாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அப்பகுதி சாலை மூடப்பட்டதோடு, சுமார் 20 குடும்பங்கள் ஹோட்டல் குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டதாக அமீரக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கியார் சூறாவளி பலவீனமடைந்து தெற்கே திரும்பினாலும், மகா என்று அழைக்கப்படும் இரண்டாவது வெப்பமண்டல புயல் வடக்கு நோக்கி செல்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு வகை சூறாவளியாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் அதன் மையத்தில் மணிக்கு 110-120-கிமீ வேகத்தில் காற்றின் வேகத்தைக் கொண்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Loading...