UAE Tamil Web

துபாய் வாழ் இந்தியர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு.. 6 மையங்களில் நடத்தப்படும் Passport Seva முகாம் – எங்கே? எப்போது? முழு விவரம்

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், வரும் மே 29, ஞாயிற்றுக்கிழமை, துபாய் மற்றும் வடக்கு அமீரக பகுதிகளில் உள்ள ஆறு BLS இன்டர்நேஷனல் சர்வீஸ் லிமிடெட் மையங்களில் Walk-In பாஸ்போர்ட் சேவா முகாமை நடத்த முடிவு செய்துள்ளது.

கடந்த மே 22ம் தேதி ஏற்கனவே ஒரு Walk-In Passport Seva முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில், இது துபாயில் உள்ள இந்திய தூதரகம் நடத்தும் இரண்டாவது முகாமாகும்.

அமீரகத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தூதரகம் அழைப்புவிடுத்துள்ளது. இந்த சேவையை யாரெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற விவரத்தையும் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

வருகின்ற 31.08.2022க்குள் பாஸ்போர்ட் காலாவதியாகும் நிலையில் உள்ளவர்கள்

மருத்துவம், மற்றும் இறப்பு போன்ற அவசர தேவைக்கு இந்தியா செல்லவேண்டியவர்கள்

அவசரமாக பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள், புதிய வேலைக்கு விசா பெற வேண்டிய நிலையில் உள்ளவர்கள்.

இந்தியா அல்லது வெளிநாடுகளில் Student Visa விண்ணப்பிப்பதற்காக பயணிக்கவிருக்கும் மாணவர்கள்

இன்னும் அவசர தேவையுள்ள மக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவையைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள BLS மையங்களில் ஏதேனும் ஒன்றில் தங்களது ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் இங்த Passport Seva நிகழ்விற்கு யாருக்கும் Appointment முன்கூட்டியே வழங்கப்படமாட்டாது, முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் (First Come First Serve) என்று தூதரகம் தங்களது பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

BLS மையங்களின் பட்டியல் பின்வரும் ட்விட்டர் பதிவில் அளிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap