UAE Tamil Web

மஹ்சூஸ் டிராவில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வென்ற 5 இந்தியர்கள் – சென்னையைச் சேர்ந்தவருக்கு அடித்த ஜாக்பாட்..!

Mahfooz-Winner-Collage

துபாயில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி மஹ்சூஸ் டிராவின் 33 வது குலுக்கல் நடைபெற்றது. இதில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை 5 இந்தியர்கள் வென்றிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எண்களோடு இவர்கள் குறிப்பிட்டிருந்த 5 எண்கள் பொருந்தியதால் இவர்கள் இரண்டாம் டயரின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆகவே, ஒவ்வொருவரும் தலா 2 லட்சம் திர்ஹம்ஸ் தொகையைப் பெற இருக்கிறார்கள். பஞ்சாபைச் சேர்ந்த 35 வயதான சஞ்சீவ் கடந்த 10 ஆண்டுகளாக அல் அய்னில் வசித்துவருகிறார். செக்யூரிட்டியாக பணிபுரியும் இவர் இந்த பரிசுத்தொகை மூலமாக தனது குடும்பத்தை அமீரகம் அழைத்துவர இருப்பதாகவும் தன்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு வெற்றியாளரான ஷஃபி (48) கேரளாவைச் சேர்ந்தவர். 19 ஆண்டுகளாக துபாயில் வசித்துவரும் இவர் இதுகுறித்துப் பேசுகையில்,”நேரலையில் நான் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இத்துணை சீக்கிரம் எனக்கு அதிர்ஷ்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை. என்னுடைய பொருளாதார பிரச்சினைகள் அனைத்தையும் இதன்மூலம் என்னால் தீர்க்க முடியும்” என்றார்.

சென்னையைச் சேர்ந்த பிரபு தனது இந்த வெற்றி குறித்துப் பேசுகையில்,” நான் மஹ்சூஸ் டிராவில் 2 லட்சம் திர்ஹம்ஸ் பரிசை வெல்வது இதுவே முதன்முறையாகும். நானும் எனது மனைவியும் சென்னையில் சொந்த வீடு ஒன்றினை வாங்குவது குறித்து பல நாட்கள் பேசியிருக்கிறோம். எங்களது கனவு இந்த வெற்றியின் மூலமாக நிறைவேற இருக்கிறது. நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்” என்றார்.

கேரளாவைச் சேர்ந்த மற்றொரு வெற்றியாளரான ரவூஃப் (27) இதுபற்றிப் பேசுகையில்,” இந்த பரிசுத்தொகையைக்கொண்டு என்னுடைய திருமண வாழ்விற்கு திட்டமிட இருக்கிறேன். எனக்கென அமைய இருக்கும் குடும்பத்தின் தேவைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இந்த தொகை எனக்கு உதவிகரமாக இருக்கும். என்னுடைய கஷ்டகாலத்தில் எனக்கு உதவிய எனது உறவினர்கள் சிலருக்கும் நான் இதன்மூலம் கைம்மாறு செய்யவிருக்கிறேன்” என்றார்.

ஷார்ஜாவில் வசித்துவரும் முகமது இந்தியாவின் ஹைதராபாத்தை பூர்வீகமாகக்கொண்டவர். தனது வெற்றி குறித்துப் பேசுகையில்,” என்னுடைய பரிசுத் தொகையை நான் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். பகிர்தலில் தான் வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. சில தொண்டு நிறுவனங்களுக்கும் நான் இந்தத் தொகை மூலம் உதவ இருக்கிறேன். அதன்மூலம் கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கையில் என்னால் ஒளியேற்ற முடியும்” என்றார்.

மஹ்சூஸ் டிராவில் கலந்துகொள்வது குறித்த முழுமையான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Mahfooz-Winner-Collage
0 Shares
Share via
Copy link