UAE Tamil Web

அபுதாபி: தடுப்பூசி மற்றும் PCR பரிசோதனைகளுகாக புதிய கொரோனா டிரைவ் த்ரூ மையத்தினை திறந்த சேஹா..!

Rabdan

அபுதாபியில் உள்ள ரப்தான் பகுதியில் புதிய கொரோனா டிரைவ் த்ரூ மையத்தினை சேஹா துவங்கியுள்ளது.

இதில் தடுப்பூசிக்கு இரண்டு டிராக்குகள், PCR மற்றும் லேசர் அடிப்படையிலான DPI பரிசோதனைகளுக்கு 4 டிராக்குகள் என மொத்தம் 6 டிராக்குகள் இங்கே நிறுவப்பட்டுள்ளன.

இங்கே தினந்தோறும் 200 பேருக்கு தடுப்பூசியும் 1000 பேருக்கு PCR மற்றும் DPI பரிசோதனைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அண்மையில் அல் அய்னில் உள்ள அல் சரோஜ் மற்றும் அபுதாபியில் உள்ள அல் மன்ஹால் ஆகியவற்றில் திறக்கப்பட்ட மையங்களைப் போலவே கப்பல் கண்டெய்னர்களைப் பயன்படுத்தி இந்த வசதி கட்டப்பட்டுள்ளது.

அதீத வெப்பம் மற்றும் குளிரைத்தாங்கும் இந்த கண்டெய்னர்கள் பராமரிக்க எளிதானவை என்பதால் இவை இதுபோன்ற மையங்களை கட்ட பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த புதிய மையத்தின் மூலம், சேஹவால் நிர்வகிக்கப்படும் கொரோனா டிரைவ்-த்ரூ சேவை மையங்களின் எண்ணிக்கை அபுதாபியில் 7 மற்றும் நாடு முழுவதும் 22 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மையத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மற்றும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள விரும்பும் நபர்கள் SEHA அப்ளிகேஷனில் முன்பதிவு செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rabdan
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap