34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

ஈத் அல் பித்ர் பண்டிகையின் முதல் நாள் மட்டும் அமீரகம் முழுவதும் உள்ள கொரோனா பரிசோதனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிப்பு!

corona test uae

அபுதாபியைச் சேர்ந்த சுகாதார சேவை நிறுவனமான சேஹாவின் கட்டுப்பாட்டில் இயங்கும்  அமீரகம் முழுவதும் உள்ள கொரோனா பரிசோதனை நிலையங்கள், ஈத் அல் பித்ர் பண்டிகையின் முதல் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈத் அல் பித்ர் பண்டிகையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் குறிப்பிட்ட அளவினான பரிசோதனை நிலையங்களும், புதன்கிழமைக்குப் பின்னர் அதிகமான பரிசோதனை நிலையங்களும் திறக்கப்படும் என சேஹா அறிவித்துள்ளது.

திறக்கப்படும் பரிசோதனை நிலையங்களும், நேரமும்

அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி (Zayed Sports City), அல் வாத்பா (Al Wathba) மற்றும் அல் பஹியா (Al Bahia) ஆகியவை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

அல் அய்ன் -ல் உள்ள அல் ஹிலி (Al Hili) மற்றும் அஷார்ஜ் (Asharj) ஆகியவை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் துபாயில் உள்ள அல் கவனீஜ் (Al Khawaneej) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

இதையும் படிங்க.!