UAE Tamil Web

மூத்த துபாய் காவல்துறை அதிகாரி மரணம் – அஞ்சலி செலுத்திய காவல்துறை..!

dubai cop

துபாய் காவல்துறையின் மூத்த அதிகாரி வியாழன்று காலமானதாக காவல்துறை அறிவித்துள்ளது. துபாய் காவல்துறையின் நிர்வாகப் பிரிவு தலைமைத் துணைத் தளபதியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் டாக்டர். அல் சலால் சயீத் பின் ஹுவைதி அல் ஃபலாசி.

இவருடைய இழப்பையடுத்து துபாய் காவல்துறை தங்களுடைய அஞ்சலியை செலுத்தியுள்ளது.

அல்லா அவருடைய ஆன்மாவை ஆசிர்வதிக்கவும், அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையை அளிக்கவும் பிரார்த்திப்பதாக துபாய் காவல்துறை வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.