இந்தியா – பாக்கிஸ்தான் கடற்பரப்பில் உருவான ஷஹீன் புயல் ஓமானில் கரையைக் கடந்திருக்கிறது. இதனால் அமீரகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் வசிப்பவர்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
தாழ்வான பகுதிகள், கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஷஹீன் புயலால் இனி அமீரகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
அண்டை நாடான ஓமானில் ஷஹீன் புயல் ஏற்படுத்திய பாதிப்பால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
