UAE Tamil Web

ரமலான் சிறப்பு தள்ளுபடி: லேப்டாப் மற்றும் செல்போன்களுக்கு 50% வரையில் தள்ளுபடி..!

cellphone

ரமலானை முன்னிட்டு எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) செல்போன் மற்றும் லேப்டாப்களுக்கு அதிக தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், லேப்டாப்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல, செல்போன்களுக்கு 50 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

முன்னதாக டிவி, ஹோம் தியேட்டர் மற்றும் வீடியோ கேம் உள்ளிட்ட பொருட்களுக்கு 50 சதவீதம் வரையில் தள்ளுபடி அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எண்டர்டெயின்மென்ட் வீக் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 6 –  12 ஆம் தேதிவரையில் இந்த அதிரடி ஆஃபர் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.