நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் 35 வயதுடைய தயாநிதி. இவர் துபாயில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செய்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் பணிக்காக ஏமன் நாட்டிற்கு சென்றுருக்கிறார்.
ஆனால் இந்திய அரசு ஏமன் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி தயாநிதி ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளார். அதனை அடுத்து துபாய் திரும்பினார்.
தற்போது விடுமுறை காரணமாக ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலைய அதிகாரிகள் அவரது பயண விவரங்களை ஆய்வு செய்தபோது அவர் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்குச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை விமான நிலைய அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.