UAE Tamil Web

ஷார்ஜா: விபத்தில் படுகாயமடைந்த இளம்பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

ஷார்ஜாவின் அல் ஹம்ரியா பகுதியில் குவாட் பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த 19 வயது ஓமான் நாட்டு பெண் பாலைவனத்தில் இருந்து மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

ஷார்ஜா போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்த இளம் பெண் குவாட் பைக்-ஐ நிறுத்த முயற்சி செய்து கவிழ்ந்ததால் பலத்த காயம் அடைந்தார்” என்றார்.

தேசிய தேடல் மற்றும் மீட்பு மையம் (NSRC), ஷார்ஜா காவல்துறையின் உத்துழப்புடன் பலத்த காயமடைந்த இளம்பெண்னை போராடி மீட்டனர்.

அல் ஹம்ரியா பாலைவனப் பகுதியில் நடந்த விபத்தில் ஒரு சிறுமி படுகாயமடைந்ததாக ஷார்ஜா காவல்துறை செயல்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அந்த புகாரைப் பெற்ற பின்னர் உடனடியாக மீட்புக் குழுவை அனுப்பப்பட்டதாக NSRC துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

கோவிட்-19 பரிசோதனைக்கான அனைத்து முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளையும் உறுதிசெய்து, படுகாயம் அடைந்த பெண்ணை அல் காசிமி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழத்து சென்றனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap