UAE Tamil Web

ஈத் விடுமுறை.. ஸ்மார்ட் கேட் உள்ளிட்ட பல சேவைகளுடன் தயார் நிலையில் ஷார்ஜா Airport – பயணிகள் என்ன எதிர்பார்க்கலாம்?

ஷார்ஜா விமான நிலைய ஆணையம் (SAA) பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக மிக உயர்ந்த சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கோடைகால பயணங்கள் உச்சம்பெற்றுள்ள நிலையில் ஷார்ஜாவிற்கு வந்து செல்லும் பயணிகளை கையாள முழு தயார்நிலையில் இருப்பதாக SAA அறிவித்துள்ளது.

ஷார்ஜா விமான நிலையம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைச் சமாளித்து அவர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்குகிறது. சமீபத்திய உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் சுய-செக்-இன் மற்றும் ஸ்மார்ட் கேட்கள் போன்ற புதுமையான தீர்வுகள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

குறிப்பாக ஈத் அல் அதா விடுமுறை மற்றும் கோடை காலத்தின் போது பயணத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், பயணிகள் தங்கள் Departure நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.

முன் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்கள் அல்லது மொபைல் போன்களில் ஒட்டப்படும் டிஜிட்டல் பாஸிற்கான தானியங்கு சரிபார்ப்பு சேவையையும் வழங்குகிறது SAA.

கூடுதலாக, ஸ்மார்ட் தகவல் மையம் பயணிகளை ஷார்ஜா விமான நிலையத்தில் தகவல் துறையுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. ஆகவே இன்று முதல் துவங்கும் இந்த நீண்ட வார இறுதி நாளுக்காக மிகவும் சிறப்பான முறையில் தயாராகியுள்ளது ஷார்ஜா விமான நிலையம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap