அமீரகத்தில் அடுத்தாண்டு முதல் வார விடுமுறையில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது அமீரக அரசு. வெள்ளிக்கிழமை மதியம் துவங்கி ஞாயிறு வரையிலும் அரசு ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஷார்ஜாவில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் எனவும் 3 நாட்கள் விடுமுறை விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சனி, ஞாயிறு போலவே வெள்ளிக்கிழமை முழுநாளும் விடுமுறையாக இருக்கும் என ஷார்ஜா அறிவித்திருக்கிறது.
உச்ச சபையின் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.