38.8 C
Dubai
August 15, 2020
UAE Tamil Web

அகதிகளுக்கு ஒரு மில்லியன் டாலர் நன்கொடை அளித்த ஷார்ஜா அறக்கட்டளை.!

sharjah charity house

கென்யாவின் ககுமா அகதிகள் முகாமிற்கும் மற்றும் கென்யா குடியரசில் உள்ள கலோபியே ஒருங்கிணைந்த குடியேற்றத்திற்கும் அடிப்படை சேவைகளை வழங்குவதற்காகவும் அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும், ஷார்ஜாவின் தி பிக் ஹார்ட் பவுண்டேஷன் (The Big Heart Foundation’s (TBHF)) என்ஜிஓ-வின் மனிதாபிமான திட்டங்களுக்கு, ஷார்ஜா அறக்கட்டளை (Sharjah Charity House) 1 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளது.

kakumaa refugee camp
kakumaa refugee camp

கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அகதிகள் குடியேற்றங்களுக்கு TBHF சமீபத்தில் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. TBHF-ன் தலைவரும், UNHCR அகதிகளின் குழந்தைகளுக்கான முக்கிய வழக்கறிஞருமான உயர்திரு ஷைகா ஜவஹெர் பின்த் முகமது அல் காசிமி அவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 191,500 மக்கள்களை கொண்ட அந்த முகாம்களின் அன்றாட சவால்களை மதிப்பீடு செய்வதில், உயர்மட்ட எமிராட்டி அதிகாரிகள், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் ஆகியோர் ஒரு குழுவாக சேர்ந்து பணியாற்றினார்கள். மேலும் இந்த அமைப்பு, பொது மற்றும் தனியார் துறைகளிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் தன்னார்வத்துடன் கூடிய ஈடுபாட்டை கோருகின்றது.

காகுமா முகாமில் உள்ள அகதிகள் யாவரும் உணவு, பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி போரையும் உறுதியற்ற தன்மையையும் விட்டு வெளியேறிய 22 தேசிய இனங்களை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், தெற்கு சூடான் மற்றும் சோமாலியா, காங்கோ ஜனநாயக குடியரசு, புருண்டி மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் வசிக்கும் முகாம்களில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகள் கூட இல்லை. கூடுதலாக கென்யாவை பாதிக்கும் வறட்சி காரணமாக குடியிருப்பாளர்கள் கடுமையான சூழலில் வாழ்கின்றனர். இதன் விளைவாக தொடர்ந்து நோய்கள் பலவற்றால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆகையால் இவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஷார்ஜா அறக்கட்டளை நன்கொடையாக அளித்த ஒரு மில்லியன் டாலர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

இதையும் படிங்க.!