UAE Tamil Web

ஷார்ஜாவில் இருந்து கிளம்பிய விமானத்தில் தீ விபத்து எனப் பரவும் செய்தி உண்மையா? – அரசு விளக்கம்..!

Flight

ஷார்ஜாவின் வான் பரப்பில் விமானம் ஒன்று தீ விபத்தைச் சந்தித்தாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. இதனை ஷார்ஜாவைச் சேர்ந்த அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கிய ஷார்ஜா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், துருக்கிக்கு சென்ற விமானத்தின் ஒரு என்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியது. விமானியின் துரித நடவடிக்கையால் அது சரிசெய்ய்யப்பட்டு, விமானமானது துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் பத்திரமாக தரையிறங்கியது எனத் தெரிவித்துள்ளது.