UAE Tamil Web

மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு – மக்களின் கோரிக்கையை ஏற்ற அரசு..!

Stock-Sharjah-Skyline--Al-Khan-Lagoon_

ஷார்ஜா மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு ஆணையம் (Sewga) மக்கள் தங்களது பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 1,000 திர்ஹம்ஸ் அல்லது அதற்குக் குறைவாக Sewga கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் பில் அளிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் அபராதமில்லாமல் கட்டணத்தை செலுத்தலாம்.

1000 திர்ஹம்ஸ்க்கு அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியவர்களுக்கு 15 நாட்கள் சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கட்டணம் செலுத்துவதற்கு 7 நாட்களே அவகாசம் வழங்கப்பட்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அபராதமில்லாமல் கட்டணம் செலுத்தும் காலத்தை அதிகரிக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் சேவை மைய இயக்குனர் ஹமாத் தஹேர் அல் ஹஜ் தெரிவித்தார்.

நான்கு புதிய ரீடிங் சைக்கிள் (reading cycles) மூலமாக இப்புதிய கட்டணக் கொள்கையை அவர் விளக்கினார். ஒவ்வொரு சைக்கிளும் ஷார்ஜாவின் ஒவ்வொரு பகுதிகளுக்குமானதாகும். அதன்படி,

வ.எண் சைக்கிள்கள் பில் காலம் அபராதமில்லாமல் பில் செலுத்தக்கூடிய காலம்
1. முதல் சைக்கிள் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி அதே மாதத்தின் 21 ஆம் தேதி வரையில் செலுத்தலாம்.
2. இரண்டாம் சைக்கிள் ஒவ்வொரு மாதமும் 14 ஆம் தேதி வரும் மாதத்தின் முதல் தேதி.
3. மூன்றாம் சைக்கிள் ஒவ்வொரு மாதமும் 21 ஆம் தேதி. வரும் மாதத்தின் 7 ஆம் தேதி.
4. நான்காம் சைக்கிள் ஒவ்வொரு மாதமும் 28 ஆம் தேதி வரும் மாதத்தின் 14 ஆம் தேதி.

இதுகுறித்து விளக்கமளித்த வாடிக்கையாளர் சேவை மையத்தின் துணை இயக்குனர் ஹுசைன் அல் அஸ்கார்,” 1,000 திர்ஹம்ஸ் அல்லது அதற்குக் குறைவாக Sewga கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் பில் அளிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் அபராதமில்லாமல் கட்டணத்தை செலுத்தலாம். தவறுபவர்களுக்கு 25 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். கட்டணம் 300 திர்ஹம்ஸ்க்கு குறைவாக இருந்தால் எவ்வித அபராதமும் விதிக்கப்படாது” என்றார்.

வாடிக்கையாளர்கள் தங்களது சைக்கிள், பில் கட்ட வேண்டிய தேதி ஆகிய அனைத்துத் தகவல்களையும் ஆணையத்தின் இணையதளம் அல்லது ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். இல்லையேல் 911 என்ற எண்ணிற்கு கால் செண்டருக்கு போன் செய்து தகவல்களைப் பெறலாம்.

Stock-Sharjah-Skyline--Al-Khan-Lagoon_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap