வாகனங்களில் 95 டெசிபெல்க்கு மேல் இரைச்சல் ஏற்படுத்தினால் அபராதம் – ஷார்ஜா போலீஸ்.!

வாகனங்களில் 95 டெசிபெல்க்கு மேல் இரைச்சல் ஏற்படுத்தினால் 2000 திரஹம் அபராதம் மற்றும் 12 கருப்பு புள்ளிகள் ( Black Points) தண்டனையாக வழங்கப்படும் – ஷார்ஜா போலீஸார் அதிரடி.!

இந்த புதிய விதிமுறை ஷேக் டாக். சுல்தான் பின் முஹம்மத் அல் காசிமி ( Member of the Supreme Council and Ruler of Sharjah) அவர்கள் பொறுப்பில் கீழ் தொடங்கப்பட்டது. பாதுகாப்பை அதிகரிக்கவும், சாலைகளில் பொதுமக்களின் இன்னல்களை குறைக்கவும் இந்த விதிமுறை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மேஜர் ஜெனரல் அல் ஷாம்சி கூறுகையில், இந்த கருவி விபத்துகள் மற்றும் இறைச்சலை குறைக்க உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

95 டெசிபல் மேல் இரைச்சலை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு 2000 திரஹம் மற்றும் 12 கருப்பு புள்ளிகளோடு சேர்ந்து 6 மாத காலம் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும், என கூடுதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times

Loading...