UAE Tamil Web

ஷார்ஜாவில் 2 புதிய மசூதிகளை திறந்து வைத்த இஸ்லாமிய விவகார இயக்குநரகம்..

sharjah

ஷார்ஜாவில் அதிக மசூதிகளை கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், உச்சசபை உறுப்பினரும், ஷார்ஜா ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப, ஷார்ஜாவில் உள்ள இஸ்லாமிய விவகார இயக்குநரகம் கல்பாவில்(Kalba) 2 மசூதிகளை ( ஹரிதா பின் அல் நுமன் மசூதி & அல் அன்வர் மசூதி ) திறந்து வைத்துள்ளது.

- Advertisment -

இதில் அல்-சஃப் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹரிதா பின் அல் நுமன் மசூதி(Haritha Bin Al Numan Mosque) மொத்தம் 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதியில் சேவை வசதிகள்(service facilities), இமாமின் வசிப்பிடமும் அடங்கும். 800 வழிபாட்டாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதி 17.30 மீட்டர் உயரமுள்ள மினாரால் சூழப்பட்டுள்ளது.

இரண்டாவதாக அல் தஹியத் பகுதியில் அமைந்துள்ள அல் அன்வர் மசூதி. இது மொத்தம் 3,136 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதியிலும் சேவை வசதிகள்(service facilities ) மற்றும் இமாமின் குடியிருப்பு ஆகியவை உள்ளன. 29.75 மீட்டர் உயரமுள்ள மினாரால் சூழப்பட்டுள்ள இம்மசூதியில் 460 வழிபாட்டாளர்களுக்கு இடமளிக்க முடியும்.