34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

போக்குவரத்து அபராதங்களுக்கான 50% தள்ளுபடித் திட்டம் நிறைவடையும் தேதி அறிவிப்பு!

uae-traffic-fines,-uae-laws,-sharjah-discount,-covid19

ஷார்ஜா : போக்குவரத்து அபராதங்களுக்கான 50 சதவிகித தள்ளுபடித் திட்டத்திற்கு  காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷார்ஜாவின் சாலை மற்றும் போக்குவரத்துத்துறையின் இயக்குனர் அப்துல் அஜீஸ் அல் ஜார்வான் (Abdul Aziz Al Jarwan) பேசுகையில்,” ஷார்ஜா நிர்வாக சபையினால் கொண்டுவரப்பட்ட போக்குவரத்து அபராதங்களுக்கான 50 சதவிகித தள்ளுபடித் திட்டம் ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது” என்றார்.

ஷார்ஜாவின் ஆட்சியாளரும், உச்ச சபையின் உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி (Sheikh Sultan bin Muhammad Al Qasimi) அவர்களின் கொரோனா காலத்தில் மக்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்றும் சிந்தனையின் அடிப்படையில் இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது” என ஜார்வான் தெரிவித்தார்.

ஷார்ஜா போக்குவரத்துத் துறையின் போக்குவரத்து செயல்பாடுகள் பிரிவின் இயக்குனரான ரஷித் அல் நுவைமி (Rashid Al Nuaimi) இதுகுறித்துப் பேசுகையில்,” மார்ச் 31, 2020 க்கு முன்னர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டோருக்கான அபராதத்தில் தள்ளுபடி அளிக்கும் இத்திட்டம் ஷார்ஜா நிர்வாக சபையினால் துவங்கப்பட்டது. இத்திட்டம் ஏப்ரல் 1, 2020 முதல்  மூன்று மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு, முதல் முறை 5,000 திர்ஹம்ஸ் அபராதமும், மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால் 10,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும் என நுவைமி தெரிவித்தார்.

இந்த தள்ளுபடிக் காலம் முடிவடைவதற்குள் தங்களது அபராதங்களை செலுத்த விரும்பும் மக்கள் www.srta.gov.ae என்னும் இணையதள முகவரியைப் பயன்படுத்தலாம் என நுவைமி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களில் 50 சதவிகித தள்ளுபடியை அளித்திருந்தது ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்துத்துறை. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க.!