39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

ஷார்ஜா: மசூதிகளில் சுத்திகரிப்புப் பணிகள் துவக்கம்!

uae-mosques,-coronavirus,-covid19.

ஷார்ஜா இஸ்லாமிய விவகாரத்துறை, அனைத்து மசூதிகளையும் மீண்டும் திறக்க இருக்கும் நிலையில், மசூதிகளில் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட மசூதிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத போதிலும், எதிர்காலத்தில் மசூதிகள் திறக்கப்படும்பொழுது தொழுக வருவோரின் பாதுகாப்பை முன்னிட்டு இந்த சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக இஸ்லாமிய விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

மசூதிகள் திறக்கப்பட்ட பின்னர் வழிபாட்டிற்காக வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்லாமிய விவகாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மசூதிகள் திறக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், எமிரேட் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய விவகாரத்துறை அலுவலகங்கள், குரான் மையங்கள் ஆகியவை சுத்திரிக்கப்பட இருக்கின்றன. வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி மசூதிகள், பார்க்கிங் பகுதிகள் மற்றும் வெளிப்புற பகுதிகள் ஆகியவையும் சுத்திகரிக்கப்பட இருக்கின்றன. மசூதிகளின் பாதுகாப்பு நிலை மற்றும் அவற்றின் தேவை பற்றி அறிய இஸ்லாமிய விவகாரத்துறை மசூதிகளைப் பார்வையிட உள்ளது.

இஸ்லாமிய விவகாரத்துறை, மசூதிகளில் தச்சு, குளிர்சாதன மற்றும் பிளம்பிங் உள்ளிட்ட சிறப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நகர்ப்புற மற்றும் ஷார்ஜாவின் பிற பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் உள்ள மசூதிகளை இஸ்லாமிய விவகாரத்துறை மேற்பார்வையிட்டுவருகிறது.

சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வண்ணம் இமாம்களுக்கு சிறப்பு பயிற்சிகளை இஸ்லாமிய விவகாரத்துறை அளித்துவருகிறது.

கடந்த வாரம் துபாய் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைத் துறை, விரைவில் துபாயில் உள்ள மசூதிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவித்திருந்தது. மேலும், வழிபாட்டாளர்கள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும் அத்துறை வெளியிட்டது. அதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க.!