போக்குவரத்து விதிமீறல் காரணமாக கைப்பற்றப்பட்ட கார்களை சிறைப்பிடித்தல் காலத்திற்குப் பிறகான நான்கு நாட்களில் ஏலத்தில் விட இருப்பதாக ஷார்ஜா நகராட்சி அறிவித்துள்ளது.
அதற்குள் வாகனவோட்டிகள் தங்களது அபராதத் தொகையை செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்டு ஆறு மாத காலத்திற்கும் அதிகமாக காவல்துறை கட்டுப்பாட்டில் நிற்கும் வாகனங்களை சிறைக்காலம் முடிந்த பிறகு போது ஏலத்தில் விடுவது வழக்கம்.
இதனைத் தவிர்க்க, இண்டஸ்ட்ரியல் ஏரியா 5 ல் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறைக்கு நேரில் வந்து தங்களது அபாரதத் தொகையை செலுத்துமாறு காவல்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
