UAE Tamil Web

காருக்குள் சிக்கிக்கொண்ட சிறுமி ; சரியான நேரத்தில் கண்ணாடியை உடைத்து வெளியே தூக்கிய போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு..!

Sharjah-Police--chief-honours-man

குழந்தைகளை வளர்ப்பது சிரமமான காரியம் தான். நமது சிறிய தவறுகூட அந்த குழந்தைகளை பெரியளவில் பாதிக்கக்கூடும். ஷார்ஜாவில் தூங்கும் குழந்தையை காருக்குள் அமர வைத்துவிட்டு, வெளியே சென்றிருக்கிறார் தந்தை ஒருவர்.

சிறிது நேரத்தில் திரும்பிவந்த தந்தையால் காரின் கதவுகளைத் திறக்க முடியாமல் போயிருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கதவு திறக்க மறுக்கவே, தந்தைக்கு வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது. அப்போது சரியான நேரத்தில் அங்குவந்த ஷார்ஜா காவல்துறையைச் சேர்ந்த அதிகாரியான முகமது ரமதான் அல் சரூனி உடனடியாக காரின் கண்ணாடியை உடைத்து குழந்தையை வெளியே எடுத்திருக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக குழந்தை மயக்கமடையவில்லை. சரூனியின் செயலைப் பாராட்டி, ஷார்ஜா காவல்துறையின் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் சிரி அல் ஷம்சி சான்றிதழ் ஒன்றினை வழங்கியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அல் ஷம்சி,” காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்கள் எப்படி மனிதாபிமானத்தோடு இருக்கவேண்டும் என்பதற்கு அல் சரூனி ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். சமூக பாதுகாப்பை உறுதிசெய்வது ஒவ்வொரு காவல்துறை அதிகாரியின் தலையாய கடமையாகும்” என்றார்.

ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதியின் கரங்களில் பாராட்டுச் சான்றிதழைப் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் இது தன்னுடைய கடமை எனவும் அல் சரூனி தெரிவித்தார்.

பெற்றோர் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், எக்காரணத்தைக்கொண்டும் குழந்தைகளை வீட்டிலோ, காரிலோ தனித்துவிடுதல் கூடாது. எப்பொதும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Sharjah-Police--chief-honours-man
0 Shares
Share via
Copy link