34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

நூற்றுக்கணக்கான ஆதரவற்ற தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வழங்க உத்தரவிட்ட ஷார்ஜா காவல்துறை ஜெனரல்..!

workers

ஷார்ஜா காவல்துறைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் சிரி அல் ஷம்ஸி 280 ஆதரவற்ற தொழிலாளர்களுக்கு தேவையான தங்குமிடம் வழங்குமாறு ஷார்ஜா காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த முயற்சியானது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், சமூகம் மீதான தங்களது பொறுப்புணர்வை நிறைவேற்றுவதற்காகவும் ஷார்ஜா காவல் துறையினரால் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று ஷார்ஜா டிவி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் (டைரக்ட் லைன்) வந்த ஒரு அழைப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பில், அமீரகத்தின் தொழில்துறை பகுதி ஒன்றில் கட்டுமான பணியில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் தொழிலாளர்கள் குழு தங்கியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட வேலை இழப்பு மற்றும் அங்குள்ள மிக மோசமான வெப்பநிலை போன்றவற்றின் காரணமாக அக்கட்டிடத்தில் வாழ்ந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து மேஜர் ஜெனரல் அல் ஷம்ஸி, ஷார்ஜா காவல்துறை அதிகாரிகளிடம் இத்தொழிலாளர்கள் உடனடியாக தங்குவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தொழிலாளர்கள் கொரோனா வைரஸிற்கு எதிரான சுகாதாரத்துடன் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

இதற்காக ஷார்ஜா அறக்கட்டளை சங்கம் மேற்கொண்ட முயற்சிகளைகளையும், விரைவான பதிலளிப்பு மற்றும் அவசரகால இச்சூழ்நிலையில் ஆதரவளித்ததையும் மேஜர் ஜெனரல் அல் ஷம்ஸி பாராட்டினார்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தந்த துணைத் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு, தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு விரைவாக திரும்புவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அல்லது ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்சி சட்டங்களின்படி அவர்களின் இந்த கடினமான சூழ்நிலையை மாற்றியமைப்பது குறித்து ஆலோசித்ததாக அல் ஷம்ஸி கூறினார்.

ஷார்ஜா காவல்துறையானது மனித மதிப்புகளை முன்னிலைப்படுத்துவதிலும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் ஒற்றுமை மற்றும் இரக்கத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News

இதையும் படிங்க.!